டாஸ்மாக் சரக்கு பேக்கிங் வழக்கு… ஐகோர்ட் தீர்ப்பு இதுதான்!

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ‘மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதாகவும், அவ்ற்றை வாங்கி, மது அருந்துவோர், பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் வீசிச் சென்று விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணாடி பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல என்பதால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், வயல் வெளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகள் காயமடைவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில், பாக்கெட்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மதுபானங்கள் விற்கப்படுவதாகக் கூறியுள்ள மனுதாரர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ எனவும் தமது மனுவில் அவர் கோரியிருந்தார்.

சசிகலாவுக்கு சிக்கல்: அந்த இடத்துக்கே மீண்டும் செல்கிறாரா?

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘பிளாஸ்டிக் தான் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட முடியாது எனவும், கண்ணாடி பாட்டில்களை வயல்வெளியில் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கோரிக்கை வைக்கப்படவில்லை’ எனவும் கூறி, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், சுத்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மதுபானம் மட்டுமல்லாமல், பால் கூட கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுவதாகவும், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தெளிவுப்படுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.