தொழில்நுட்பத் துறையில் ஒரு படி முன்னேறி, இறுதியாக பொறியாளர்கள் பறக்கும் பைக்கையும் தயார் செய்துள்ளனர். இதுவரை ஹாலிவுட் படங்களில் தான் பறக்கும் பைக்கை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது அதை நீங்களே ஓட்டலாம். ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் இந்த பைக்கில் பறக்கலாம், இதற்கு பைலட் உரிமம் கூட தேவையில்லை என்பது சிறப்பு. இந்த பைக்கைப் பற்றிய இன்னும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
உலகின் முதல் பறக்கும் பைக்
பறக்கும் பைக்கை வடிவமைத்துள்ளது ஸ்வீடிஷ்-போலந்து நிறுவனமான ஜெட்சன். இது குறித்து தகவலை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், இந்த பைக் உலகின் முதல் பறக்கும் பைக்காக இருக்கலாம் எனக் கூறியுள்ளது. பறக்கும் பைக்கை ஓட்டுபவர்கள் ஜேம்ஸ் பாண்டை போல் உணருவார்கள் என கூறியுள்ளது.
மேலும் படிக்க | Redmi Note -ன் புதிய 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்கள்…! சிறப்பம்சம், விலை பட்டியல் இதோ
முழு சார்ஜில் 20 நிமிடங்கள் பறக்க முடியும்
கடந்த அக்டோபரில் தயாரிக்கப்பட்ட இந்த பறக்கும் பைக், இப்போது முழுமையான பயன்பாட்டுக்கு தயாராகிவிட்டதாக ஜெட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. புக்கிங்குகள் தொடங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இந்த பைக்கை 2 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்தால் 20 நிமிடங்கள் வரை பறக்க முடியும்.
உரிமம் தேவையில்லை
ஜெட்சன் ஒன் பைக்கை ஓட்ட பைலட் உரிமம் கூட தேவையில்லை, மேலும் மணிக்கு 63 மைல் (சுமார் 101 கிமீ) வேகத்தில் பறக்க முடியும். ஜெட்சன் ஒன் புறப்படுவதற்கு ஓடுபாதை எதுவும் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் எளிதாக தரையிறங்கலாம்.
விலை என்ன?
அதன் விலையையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பைக்கின் விலை 68,000 பவுண்டுகள் அதாவது 68,84,487 ரூபாய் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றிய பீட்டர் டர்ன்ஸ்ட்ரோம் பேசும்போது, முதன்முறையாக இதை நான் பறக்கவிட்டபோது, வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றார். அதிர்வுகள் இருக்காது எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | கூகுளில் ஹேக்கர்கள் ஆபத்து அதிகம் – எச்சரிக்கும் மத்திய அரசு
அரசு அனுமதி
இது ஜாய்ஸ்டிக் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. நகரங்களில் பறக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை. திறந்தவெளி நிலத்தில் மட்டுமே பறக்க முடியும். 2026-க்குள் இரண்டு இருக்கைகள் கொண்ட பறக்கும் காரை உருவாக்குவதுதான் எங்களின் அடுத்த திட்டம் என்று பீட்டர் தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைவரையும் விமானிகளாக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.