கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம் மகான். துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள, இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், நேபாளம், டார்ஜிலிங், சென்னை போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது. மகான் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் இந்த திரைப்படம் நாளை நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க | ஒரே வருடத்தில் வெளியாகபோகும் விக்ரமின் 4 படங்கள்!
முன்னதாக வெளிவந்த மகான் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மகான் படத்தில் இருந்து மிஸ்ஸிங் மீ பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் பாடியுள்ள மிஸ்ஸிங் மீ பாடலின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசத்தலான அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை காணுங்கள்.
சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஹீரோவாக இருக்கும் நடிகர் விக்ரம் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பால் மக்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார். அதன்படி இவர் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மூன்று மொழிகளில் OTT-யில் வெளியாகும் மகான்! கதை இது தான்!