மாணவர்கள் கவனத்திற்கு; சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிகிறதா?

சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு முதல் பருவத் தேர்வு (டர்ம் தேர்வுகள்) 2021-22: 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்களின் முதல் பருவத் தேர்வுகளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் — cbse.gov.in மற்றும் cbseresults.nic.in இல் பார்க்கலாம்.

இதற்கிடையில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஐசிஎஸ்இ (வகுப்பு 10) மற்றும் ஐஎஸ்சி (வகுப்பு 12) செமஸ்டர் 1 முடிவுகளை பிப்ரவரி 7, 2022 அன்று அறிவித்தது.

மேலும் படிக்க | CBSE 12th Result 2022: ரிசல்ட் இன்று! சில முக்கிய குறிப்புகள் உள்ளே

சிபிஎஸ்இ வாரியம் எந்த மாணவரையும் தேர்ச்சி பெற்றவர் (பாஸ்), தோல்வியுற்றவர் (ஃபெயில்) அல்லது தேர்வை திரும்ப எழுத வேண்டியவர் (எசன்ஷியல் ரிபீட்) என அறிவிக்காது. மார்ச்-ஏப்ரல், 2022 இல் திட்டமிடப்பட்ட 2-வது போர்டு தேர்வுகளுக்குப் பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும். சிபிஎஸ்இ 2-வது பருவத் தேர்வுகளுக்கான தேதித் தாள்கள் cbse.nic.in அல்லது cbse.gov.in இல் வெளியிடப்படும்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு (டர்ம் தேர்வுகள்) முடிவுகள் எவ்வாறு பதிவிறக்குவது
சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு பதிவிறக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பார்க்க cbseresults.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
  • இரண்டாம் நிலை (10 ஆம் வகுப்பு) முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ரோல் எண் மற்றும் பள்ளி எண்ணை உள்ளிடவும்.
  • சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவைச் சமர்ப்பித்து பதிவிறக்கவும்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் எவ்வாறு பதிவிறக்குவது
சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்ய, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  • சிபிஎஸ்இ முடிவு இணையதளமான cbseresults.nic.in ஐப் பார்வையிடவும்.
  • சீனியர் செகென்டிரி (12 ஆம் வகுப்பு) முடிவுகளுக்கு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ரோல் எண் மற்றும் பள்ளி எண்ணை உள்ளிடவும்.
  • சிபிஎஸ்இ வகுப்பு 12 முடிவைச் சமர்ப்பித்து பதிவிறக்கவும்.

மேலும் படிக்க | Cyberwall: ஹேக்கர் இணைப்புகளுக்கு சவால் விடும் சைபர்வால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.