நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 06426/06425 நாகர்கோவில் ஜங்ஷன்-திருவனந்தபுரம் சென்ட்ரல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் 11ம் தேதி முதல் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு நாகர்கோவில் முதல் நேமம் வரை எந்த நேர மாற்றமும் செய்யப்படவில்ைல. நாகர்கோவிலில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலில் 8.15க்கு சென்று 8.20க்கு அங்கிருந்து புறப்படும். கொல்லத்திற்கு காலை 10.25 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண் 06427 கொல்லம் ஜங்ஷன்-நாகர்கோவில் ஜங்ஷன் தினசரி முன்திவு இல்லாத சிறப்பு ரயில் 3.25 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். நேமம்-நாகர்கோவில் இடையே நேர மாற்றம் இல்லை. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மாலை 5.15க்கு புறப்படும்.
