வருடாபிஷேகத்தை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவில்லிபுத்தூர்: வருடாபிஷேகத்தை முன்னிட்டு, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருடாபிஷேக விழா மகா சாந்தி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. இந்த விழா 3 நாட்கள் நடைபெறும். விழா முக்கிய நிகழ்ச்சியாக இன்று 108 கலச திருமஞ்சனமும், நாளை ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்திலிருந்து இன்று காலை தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. கோயில் யானை ஜெயமால்யதா மூலம் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின்னர் அந்த தீர்த்தத்தம் மூலம் ஆண்டாள், ெரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இது குறித்து கோயில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, ‘‘வருடாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் யானை மீது தங்க குடத்தில் தீர்த்தத்தை எடுத்து வந்து அம்மன் மற்றும் சுவாமி அபிஷேகத்துக்கு பயன்படுத்தி வருகிறோம்’’ என்றார். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.