நகர்ப்புற
உள்ளாட்சித் தேர்தல்
பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில்
திமுக
மிகப் பெரும்பான்மையான இடங்களை பெற்றது. அதிமுகவுக்கு சொற்ப இடங்களே கிடைத்தன. அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுக்கு வெற்றி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை குறிப்பாக மாநகராட்சி மேயர் இடங்களை கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் சில இடங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சட்டப் பேரவையில் இதை நோட் பண்ணீங்களா? இந்த தலைமுறை பார்க்காத விஷயம்!
சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தண்ணி காட்டிய கோவை மாவட்டம் இந்த முறையாவது கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் நிலவுகிறது. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்த
அரசு ஊழியர்கள்
இந்த முறை எதிர் நிலைப்பாடு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த
மு.க.ஸ்டாலின்
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டத்தை ஒழித்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம், நிலுவையில் உள்ள அரியர்ஸ், சரண்டர் போன்றவற்றை நிறைவேற்றுவோம் என்றார்.
ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆனபோதும் அதற்கான அறிவிப்புகள் வராததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே அரசு ஊழியர்கள் இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்துவர். ஆனால் தபால் வாக்குகளுக்கான படிவங்களை பெறுவதற்குகூட பல இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று பல இடங்களிலிருந்து தகவல் வருகிறது.
பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு!
இந்நிலையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். 10ஆம் தேதி வரை இது தொடர உள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்றும் நாளையும் (பிப்ரவரி 9,10) இரண்டு நாட்கள் அந்தந்த அலுவலக நுழைவாயில்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நாளை உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள் தபால் ஒட்டு போடுவது பற்றி முடிவு செய்யவுள்ளதாகவும் அரசு ஊழியர்கள் சங்க வட்டாரத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.