டிவிஎஸ் அழைத்து வந்த வெளிநாட்டு அதிகாரி.. இனி பஜாஜ், ஹீரோவுக்குக் கஷ்டம் தான்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது மகிப்பெரிய போட்டி உருவாகியுள்ளது, இந்தப் போட்டியில் யார் முதலில் அதிகப்படியான வாடிக்கையாளர்களையும், வர்த்தகச் சந்தையும் பிடிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் தொடர்ந்து பயணிக்க முடியும். இந்தச் சூழ்நிலையில் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தனது வர்த்தகம், உற்பத்தி, டிசைன், திறன் ஆகியவற்றை மேம்படுத்தப் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.

எல்ஐசி பாலிசி உங்களிடம் இருக்கா.. அப்போ 5% டிஸ்கவுண்ட் கட்டாயம் கிடைக்கும்..!

இதன் படி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இருசக்கர வாகன விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் டிவிஎஸ் தனது தலைமை நிர்வாகத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

 டிவிஎஸ் குழுமம்

டிவிஎஸ் குழுமம்

டிவிஎஸ் குழுமம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாகவும், இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாகத் திகழ்கிறது. இதேவேளையில் நீண்ட காலமாக டிவிஎஸ் மோட்டார் குழுமம், குடும்ப நிர்வாகப் பொறுப்பிலேயே இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டு அதிகாரியை உயர் மட்ட நிர்வாகத்தில் களமிறக்கப்பட்டு உள்ளது.

 வேணு சீனிவாசன்

வேணு சீனிவாசன்

டிவிஎஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கும் வேணு சீனிவாசன் தனது சேர்மன் பதவியே ரால்ஃப் டைட்டர் ஸ்பெத்-க்கு அளிக்க உள்ளதாக டிவிஎஸ் நிர்வாகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேணு சீனிவாசன் இனி நிர்வாக இயக்குனராக மட்டும் அல்லாமல் டிவிஎஸ் மோட்டார் கம்பெணியின் சேர்மன் எமரிட்டஸ் ஆக இருக்கப்போகிறார். இருவருடைய பணிகளும் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

 ரால்ஃப் டைட்டர் ஸ்பெத்
 

ரால்ஃப் டைட்டர் ஸ்பெத்

ரால்ஃப் டைட்டர் ஸ்பெத், வார்விக் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவர், இவர் BMW நிறுவனத்தில் பணியைத் துவங்கி, போர்டு, Linde ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய ரால்ஃப் டைட்டர் ஸ்பெத் உத்திகள், வடிவமைப்புகள், ஸ்டைலிங் மற்றும் தயாரிப்புகள் எனப் பல பிரிவுகளில் பணியாற்றினார்.

 ஜாகுவார் லேண்ட் ரோவர்

ஜாகுவார் லேண்ட் ரோவர்

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய ரால்ஃப் டைட்டர் ஸ்பெத் இந்நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பதவியேற்றார். 2010ஸ் டாடா மோட்டார்ஸ் நிர்வாகக் குழுவில் இணைந்து பல மாற்றங்களைச் செய்த ரால்ஃப் டைட்டர் ஸ்பெத், ரத்தன் டாடா நேரடியாக 2016ல் அழைத்து டாடா சன்ஸ் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராகச் சேர்த்தார்.

 வளர்ச்சி வாய்ப்பு அதிகம்

வளர்ச்சி வாய்ப்பு அதிகம்

இப்படி ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய ரால்ஃப் டைட்டர் ஸ்பெத் வெளிநாட்டு வர்த்தகம் மட்டும் அல்லாமல் இந்திய சந்தை வர்த்தகச் சந்தை குறித்து அதிகப்படியான அனுபவம் உண்டு. டிவிஎஸ் நிர்வாகத்தில் இவருடைய நியமனம் புதிய வளர்ச்சி மற்றும் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தித் தரும், குறிப்பாக டிவிஎஸ்-ன் ஐரோப்பிய சந்தை கனவுகளைச் சாத்தியப்படுத்த முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TVS appoints JLR Ralf Speth as chairman, Venu Srinivasan became Chairman Emeritus

TVS appoints JLR Ralf Speth as chairman, Venu Srinivasan became Chairman Emeritus from april 1, 2022 டிவிஎஸ் அழைத்து வந்த வெளிநாட்டு அதிகாரி.. இனி பஜாஜ், ஹீரோவுக்குக் கஷ்டம் தான்..!

Story first published: Wednesday, February 9, 2022, 18:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.