பெயரை மாற்றி வேலைபெற்ற இளைஞர்: பிரித்தானியாவில் நடந்த சம்பவம்


Inein victor Garrick (34) என்ற நபர் தனது நைஜீரிய பெயரில் மாற்றத்தை கொண்டுவந்த பின்பே வேலை கிடைத்ததாக தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நைஜிரியாவை சேர்ந்த Inein victor Garrick (34) பிரித்தானியாவில் சவுத் வேல்ஸ் போக்குவரத்துக்கு துறையில் பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தான் நைஜீரிய பெயரை மாற்றியது குறித்தும், அதன் பிறகு அவருக்கு கிடைத்த வேலை வாய்ப்பு குறித்தும் தெரிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

Inein victor Garrick (34) சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பிற்காக காத்து இருந்ததாகவும். தனக்கு வேலை பெறுவதற்கான அனைத்து தகுதிகள் இருந்தும் யாரும் வேலைக்கோ அல்லது நேர்காணலுக்கோ அழைக்கவில்லை. நேர்காணலுக்காக வந்த சில வாய்ப்புகளும் அவரது முதல் பெயர் அழைப்பதற்கு கடினமாக இருப்பதாக கூறி நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில் தனது Inein victor Garrick என்ற பெயரின் முதல் பெயரான inein யை நீக்கிவிட்டு அவரது இரண்டாவது பேரான victor Garrick என்ற பெயரை முதல் பெயராக மாற்றிக்கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து நிறைய நேர்காணலுக்கான வாய்ப்புகள் கிடைத்தாகவும், இறுதியில் வேலையும் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் Inein தனது 22வது வயதில் பிரித்தானியாவிற்கு வந்தது முதலே எனது பெயரை உச்சரிக்க பெரும்பாலானோர் சிரமப்பட்டதை உணர்ந்துள்ளதகாவும், ஆனால் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் போதுதான் இதை முழுமையாக உணர முடிந்தது என தெரிவித்துள்ளார்.

தற்போது Inein victor Garrick சவுத் வேல்ஸ் போக்குவரத்துக்கு துறையில் பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு தனது அடையாளத்தின் ஒருபகுதியை இழந்து நிற்பதாக குற்றவுணர்வு ஏற்பட்டு உடனடியாக தனது ineim என்ற பேரை தனது தற்போதைய பெயருடன் இணைக்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது சக ஊழியர்களுடன் தெரிவிக்கையில் அவர்களும் அதற்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து Inein victor Garrick என்று மீண்டும் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், நான் நீண்டநாள்களாக எனது அடையாளத்தின் ஒருபகுதியை மறைத்து வைத்து இருந்ததாகவும், அதற்காக வெக்கப்படுவதகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ஒரு நைஜீரியன் என்பதில் பெருமை கொள்வதாகவும், இனி அதை வெளிக்காட்ட எனக்கு எந்த தயக்கமும் இல்லை என தெரிவித்துள்ளார்.  இதற்கு உறுதுணையாக இருந்த எனது அலுவலகத்திற்கு மிக்க நன்றி எனவும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.