யம்மாடி.. இவ்வளவு பெரிய பாம்பா: யாஷிகாவின் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை
யாஷிகா ஆனந்த்
, தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். தற்போது உடல்நலம் தேறியுள்ள யாஷிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகாமாக வந்த யாஷிகாவின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை சரியாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீடு திரும்பினார் யாஷிகா.

செம்ம ஹாப்பி மூடில் தலைவர், தளபதி ரசிகர்கள்… நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு..!

விபத்திற்கு பின்னர் தற்போது உடல்நிலை தேறி வந்துள்ள யாஷிகா சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு சென்று போட்டியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

View this post on Instagram A post shared by Y A S H ������⭐️ (@yashikaaannand)

அந்த வீடியோவில் மலைப்பாம்பு ஒன்றை அலேக்காக தூக்கி கழுத்தில் போட்டுக்கொண்டு கூலாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் கேலி கிண்டலுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த வீடியோவை யாஷிகா பகிர்ந்த சில மணி நேரங்களிலே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினியை வரவேற்ற யாஷிகா ; வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.