10 நாளில் பெரிய மாற்றம் ஏற்படும்… உதயநிதி பேச்சால் அமைச்சர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர்
உதயநிதி ஸ்டாலின்
தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள எதுமலை பிரிவு ரோட்டில் முசிறி,துறையூர், மண்ணச்சநல்லூர், சமயபுரம், உப்பிலியாபுரம், பாலகிருஷ்ணம்பட்டி உள்ளிட்ட நகராட்சி,பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

சோசியல் மீடியாவில் பிரச்சாரம் – ஆட்சியர் எச்சரிக்கை!

கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

“கொரோனோ இரண்டாவது அலையின் போது தான் திமுக அரசு பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 8 மாதத்தில் 9 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மக்களைப்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக 50 லட்சம் மக்கள் பலன் அடைந்துள்ளனர். சாலை விபத்து என்றால் உடனடியாக 48 மணி நேரத்திற்கு அவர்கள் இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டம்.

திருச்சி என்றாலே இது திமுகவின் கோட்டை, அண்ணன் கே.என் நேருவின் கோட்டை. சரியாக இன்னும் 10 நாட்கள் மட்டும் தான் உள்ளது. ஏதோ வந்தோம் போனோம் இல்லை என்று இல்லாமல் ஒவ்வொரு தெருவாக சென்று ஒவ்வொருவரும் 5 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும்.

சார்ஜா டு திருச்சி; அயன் பட பாணியில் தங்கம் கடத்தல்!

இந்த தீவிர பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதி கூறி உள்ளோம். கண்டிப்பாக அதனை நிறைவேற்றுவோம். கூட்டுறவில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் அதேபோல் செய்தார்.

சட்டமன்ற தேர்தல் எப்படி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கும் அதேபோல் 100% நகர்புற தேர்தலில் நீங்கள் வெற்றியை ஏற்படுத்தித்தர வேண்டும். இது கடந்த ஆட்சியின்போது அடிமை ஆட்சி இல்லை.இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி” என ஆவேசமாக பேசினார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.