2022ம் ஆண்டின் முதல் ராக்கெட்: காதலர் தினத்தில் விண்ணில் பாயப்போகும் பிஎஸ்எல்வி – சி 52

2022ம் ஆண்டின் முதல் ராக்கெட்: காதலர் தினத்தில் விண்ணில் பாயப்போகும் பிஎஸ்எல்வி – சி 52

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்கள் பிப்ரவரி 14ஆம் தேதி காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்படஉள்ளன. இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் பிப்ரவரி 13ம் தேதி காலை 4.29 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட் மூலம் இஓஎஸ்-4 உட்பட 3 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ISRO launch for Earth Observation Satellite on PSLV-C52 on February 14th 2022

நடப்பு ஆண்டில் இஓஎஸ்-4 ரிசாட்-1ஏ மற்றும் இஓஎஸ்-6 ஓசோன் சாட்-3 ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராக்கெட் மூலம் இஓஎஸ்-4 உட்பட 3 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1710 கிலோ எடை கொண்ட ரிசாட்-1ஏ என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், மாணவர் செயற்கைக்கோளான இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் தொழில்நுட்ப விளக்கக் செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட்மூலம் இந்த செயற்கைக் கோள்களும் பிப்ரவரி 14ஆம் தேதி காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் பிப்ரவரி 13ம் தேதி காலை 4.29 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PSLV-C52 on February 14th 2022: (பிஎஸ்எல்வி – சி 52) The launch of Polar Satellite Launch Vehicle, PSLV-C52 is scheduled at 05:59 hours on February 14, 2022 from the First Launch Pad of Satish Dhawan Space Centre, Sriharikota.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.