WFH முடிந்தது, ஆபீஸ்க்கு கிளம்புங்க.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் நிலை என்ன..?!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அனைத்து துறையிலும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் வாரங்கள், மாதங்கள் தாண்டி தற்போது கிட்டதட்ட 2 வருடமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஒமிக்ரான் மூலம் உருவான 3வது தொற்று அலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாத நிலையில் பள்ளிகள், கல்லூரிகளைத் தொடர்ந்து நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ளது.

ஆசியாவிலேயே இனி அதானி தான் நம்பர் 1.. அம்பானி-க்கு எந்த இடம்..!

இதில் முக்கியமாக ஒரு பிரிவு ஊழியர்கள் அனைவரையும் நாடு முழுவதும் அலுவலகத்திற்கு அழைக்க உத்தரவு வெளியாகியுள்ளதால், 2வருடமாக வீட்டில் இருந்து பணியாற்றும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் நிலை என்ன..?

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், வைரஸ்-ன் வீரியமும் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் மத்திய அரசு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் தனது ஊழியர்கள் அனைவரையும் அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளனர்.

 ஜிதேந்திர சிங்

ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் பிப்ரவரி 6, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 7, திங்கட்கிழமை முதல் 100 சதவீத ஊழியர்களும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும்.

 மத்திய அரசு உத்தரவு
 

மத்திய அரசு உத்தரவு

இதன் மூலம் மத்திய அரசு வீட்டில் இருந்து பணியாற்றும் முறை முழுமையாக நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த உத்தரவு அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று, இதை எவ்விதமான தளர்வும் இல்லாமல் அமலாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 ஐடி துறை

ஐடி துறை

இந்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி துறை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் இன்று வரையில் 90 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், மத்திய அரசு தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ள நிலையில் தனது முடிவுகளை மறு ஆய்வு செய்ய உள்ளது.

 டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல்

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல்

ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டிசம்பர் மாதமே தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்த நிலையில் ஒமிக்ரான் தொற்று இத்துறை நிறுவனங்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியது.

 ஐடி ஊழியர்கள்

ஐடி ஊழியர்கள்

மேலும் தற்போது தொற்றின் எண்ணிக்கையும், வீரியமும் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் விரைவில் ஐடி நிறுவனங்கள் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு விரைவில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் திட்டமிட்டு வருகிறது. ஆனாலும் மொத்தமாக அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை அழைக்க விருப்பம் இல்லை, பகுதி பகுதியாக மட்டுமே ஊழியர்களை அழைக்கத் திட்டமிட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Work from Home Ends for central Govt Employees; What about TCS, Infosys, Wipro, HCL employees

Work from Home Ends for central Govt Employees; What about TCS, Infosys, Wipro, HCL employees WFH முடிந்தது, ஆபீஸ்க்கு கிளம்புங்க.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் நிலை என்ன..?!

Story first published: Wednesday, February 9, 2022, 16:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.