அதை மாடு கூட சாப்பிடல… திமுக அரசு அளித்த பொருளை கேவலமாக விமர்சித்த ஓபிஎஸ்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம்
கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, “சட்டமன்ற தேர்தலின்போது திமுக 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. அந்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி தமிழக மக்கள் அவர்களுக்கு வாக்களித்துவிட்டனர்.

அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டுமென்று திமுகவினர் வலியுறுத்தினர். தற்போது திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த அரிசியை மாடுகூட சாப்பிடமாட்டேன் என்கிறது. அதனை மாட்டுக்கு வைத்தால், மாடு நம்மை முறைத்துப் பார்க்கிறது.

13 வயதில் வயசுக்கு வந்துட்டேன்.. அப்போதெல்லாம்.. கவிஞர் சல்மாவின் நெகிழ்ச்சிப் பதிவு!

கொங்கு மண்டலம்
இன்றுவரை அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது” என்று ஓபிஎஸ் கிண்டலும், பெருமிதமுமாக கூறினார்.

இந்த பரப்புரை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி
பேசும்போது, “கோவை மாவட்டத்துக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ, அத்தனையும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு இந்தத் திட்டப் பணிகள் எல்லாம் மந்தமாகிவிட்டன. உள்ளாட்சித் தேர்தலில் பணத்தை மட்டும் வைத்து திமுக வெற்றி பெற நினைக்கிறது” என்று முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.