இன்ஸ்டாகிராம் அதன் பயனர்கள் பதிவிடும் போஸ்டுகள், கமெண்டுகள் மற்றும் பிறவற்றை எளிதாக நீக்கும் வகையிலான அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி கொள்ள நீங்கள் ‘Your activity’ ஆப்ஷனை தேர்வு செய்து அதன் மூலம் இந்த அம்சத்தை செய்லபடுத்தி கொள்ளலாம். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் போஸ்ட், ஸ்டோரி, கமெண்ட், ரீல்ஸ், ஐஜிடிவி என ஒவ்வொன்றையும் தனித்தனியாக டெலீட் செய்ய தேவையில்லை. ஒரே இடத்தில் இருந்தே லைக்ஸ், போஸ்ட், ஸ்டோரி, கமெண்ட், ரீல்ஸ், ஐஜிடிவி என எவற்றையெல்லாம் நீக்க வேண்டுமோ அவற்றை மொத்தமாக தேர்வு செய்து டெலீட் செய்துவிடலாம்.
மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம், Whats App-ஐ விற்கும் Facebook? சிக்கல் என்ன?
அதுமட்டுமல்லாது முக்கியமானவற்றை நீங்கள் இன்ஸ்டாகிராமில் தேட முயலும்போது, அவை தனித்தனியே தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில், முன்பு செய்யப்பட்ட லைக்ஸ், போஸ்ட், ஸ்டோரி, கமெண்ட், ரீல்ஸ் என அனைத்தையும் ஒரே நேரத்தில் காட்டிவிடும். மேலும் இதனை பயன்படுத்தி நீங்கள் சமீபத்தில் டெலீட் செய்தவற்றையும் கண்டுபிடிக்க முடியும். அதோடு செர்ச் ஹிஸ்டரி மற்றும் நீங்கள் பார்வையிட்ட இணைப்புகள், அதில் எவ்வளவு நேரம் செலவு செய்தீர்கள் என்பதையும் இதன் மூலம் பார்க்க இயலும், அந்த தரவுகளையும் நம்மால் சேமித்துக்கொள்ள இயலும்.
‘Your activity’ ஆப்ஷனை இயக்க முதலில் உங்கள் ப்ரொபைல்-க்கு செல்லவும், பின்னர் அதன் மேல் வலது மூலையில் உள்ள மெனுவை க்ளிக் செய்த பிறகு ‘Your activity’ ஆப்ஷனை காண முடியும். சமீபத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வுத்தளம் ‘Take A Break’ என்ற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பயனர்கள் குறிப்பிட்ட நேரம் இன்ஸ்டாகிராமில் போஸ்டுகளை ஸ்க்ரோல் செய்திருந்தால் அவர்களை ஓய்வெடுக்க நினைவுபடுத்தும். இவ்வாறு பல அம்சங்களை இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது.
மேலும் படிக்க | அதிக லைக்ஸ்களை பெற்று கின்னஸ் சாதனை படைத்த முட்டை!