உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று துவக்கம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களின் 58 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று (பிப்ரவரி 10, 2022) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தில் கோவிட்-19 நெறிமுறைகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

ஷாம்லி, மீரட், ஹாப்பூர், முசாபர்நகர், பாக்பத், காசியாபாத், புலந்த்ஷாஹர், அலிகார், ஆக்ரா, கௌதம் புத்த நகர் மற்றும் மதுரா ஆகிய 11 மாவட்டங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஏழு கட்ட தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 2.27 கோடி பேர் வாக்காளர்கள் இந்த பகுதிகளில் வாக்களிக்க தயாராக உள்ளனர். ஸ்ரீகாந்த் சர்மா, சுரேஷ் ராணா, சந்தீப் சிங், கபில் தேவ் அகர்வால், அதுல் கர்க் மற்றும் சவுத்ரி லக்ஷ்மி நரேன் ஆகிய அமைச்சர்களின் எதிர்கால அரசியல் வாழ்க்கை இந்த கட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

25,849 வாக்குச்சாவடிகளிலும், 10,766 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக 2017 உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 58 இடங்களில் 53 இடங்களையும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தலா 2 இடங்களையும் பெற்றன.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, லவ் ஜிகாத்துக்கு 10 ஆண்டு சிறை : பா.ஜ.க வாக்குறுதி

மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை – தீவிரமடையும் போராட்டங்கள்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.