ஐபிஎல் மெகா ஏலம்: தேதி, நேரம், இடம் அறிவிப்பு!

2022 ஐபிஎல் ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூரில் ஏலம் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் அதே தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலம் காலை 11 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்த வருடம் முதல் விவோவில் இருந்து டாடா ஐபிஎல் போட்டிகளை வழங்குகிறது.  2022 சீசனில் இருந்து டாடா ஐபிஎல் என அழைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க | மும்பை கேப்டனாக விரும்பினாரா ஹர்திக் பாண்டியா?

இந்த ஐபிஎல் சீசனில் 2 புதிய அணிகள் இணைந்து 10 அணிகள் கொண்டதாக மாறி உள்ளது.  மொத்தமாக இந்த ஆண்டு 74 போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்களும் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.  தங்கள் அணிக்கு சிறந்த பேட்மேன்களை தாண்டி, கேப்டன்களையும் அணி நிர்வாகம் தேடி வருகிறது. இதன் காரணமாக மெகா ஏலத்தில் சில வீரர்களின் பங்குகள் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கான 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இதுவரை, 10 உரிமையாளர்களும் தங்கள் அணியில் மொத்தம் 33 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

இந்த ஐபிஎல் ஏலம் 2022, மெகா ஏலம் நடைபெறும் கடைசி ஆண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  தற்போது இரண்டு புதிய அணி உரிமையாளர்களும் தங்கள் கேப்டன்களை நியமித்துள்ளனர்.  லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், அகமதாபாத்துக்கு ஹர்திக் பாண்டியாவும் தலைமை வகிக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கும் கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேகேஆர், ஆர்சிபி, பிபிகேஎஸ் போன்ற அணிகள் திறமையான கேப்டன்களைத் தேடி வருகின்றனர்.

ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் மீதமுள்ள தொகை:

பிபிகேஎஸ் – 72 கோடி

எஸ்ஆர்ஹெச் – 68 Cr

ஆர்ஆர் – 62 கோடி

ஆர்சிபி – 57 கோடி

எம்ஐ – 48 கோடி

சிஎஸ்கே – 48 கோடி

கேகேஆர் – 48 Cr

டிசி – 47.5 கோடி

லக்னோ-60 கோடி

அகமதாபாத் – 53 கோடி

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் மூலம் கம்பேக் கொடுப்பாரா நடராஜன்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.