ஐபில் ஏலத்தை நேரலையில் இலவசமாக காட்டும் செயலிகள்..!

ஐபிஎல் 2022 ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது. ஏலம் இரண்டு நாட்கள் நடைபெறும். காலை 12 மணிக்கு ஏலம் தொடங்கும் நிலையில் 11 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது .

ஹாட்ஸ்டார்

ஐபிஎல் ஏலம் முழுவதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலி லைவ்வாக பார்க்கலாம். நீங்கள் இந்தியாவிற்கு வெளியே இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவராக இருந்தால் YuppTV  மூலம் காண முடியும். இவைதவிர மேலும் சில வழிகளில் ஐபிஎல் ஏலத்தை இலவசமாக காணலாம்.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!

ஜியோ 

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை சில ரீச்சார்ஜ் திட்டங்கள் மூலம் இலவசமாக பெறலாம். ஜியோவின் ரூ.499 திட்டம் மிகவும் பிரபலமானது. இதில் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவார்கள். நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.699 திட்டத்தில், Disney + Hotstar உடன் 28 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டா கிடைக்கும். ரூ.659 திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு கிடைக்கும். ரூ.799 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு கிடைக்கும். இந்த இரண்டு திட்டங்களுடனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடத்திற்கு பெறலாம்.

ஏர்டெல் 

ஏர்டெல் வாடிக்கையாளர்களும் ஐபிஎல் ஏலம் 2022 -ஐ தங்கள் மொபைல் போன்களில் நேரடியாக பார்க்கலாம். ஏர்டெல்லின் ரூ.499 திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாகப் பெறலாம். இதில் தினமும் 2ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும். அதே சமயம் ரூ.599 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா 28 நாட்களுக்கும், ரூ.838 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா 56 நாட்களுக்கும் கிடைக்கும். இந்த இரண்டு திட்டங்களுடனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும்.

மேலும் படிக்க | ப்ளிப்கார்ட்டில் ரூ.499-க்கு Samsung 5G ஸ்மார்ட்போன்..! 

வோடபோன் ஐடியா 

வோடபோன் ஐடியாவின் ரூ.601, ரூ.901 மற்றும் ரூ.3099 திட்டங்களுடன், வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தாவைப் பெறலாம். ரூ.601 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.701 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், ரூ.3099 திட்டம் ஒரு வருடத்திற்கானது. இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு கிடைக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.