’கெட்ட வார்த்தை, அதட்டல்’ கேப்டன் ரோகித் சர்மாவின் மறுமுகம்..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனாக அடியெடுத்து வைத்திருக்கும் ரோகித் சர்மா, வெற்றியுடன் கணக்கை தொடங்கியிருக்கிறார். அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக பல்வேறு செய்திகள் உலாவினாலும், களத்தில் அவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும்போது, ‘ எங்களுக்குள் எதுவும் இல்லை’ என்பதை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்: தேதி, நேரம், இடம் அறிவிப்பு!

2வது ஒருநாள் போட்டியில் பவுண்டரி லைனில் அபாரமான கேட்ச் ஒன்றை விராட் பிடித்தபோது, துள்ளிக் குதித்த ரோகித், கோலி டான்ஸ் ஆடியபோது கிண்டல் செய்தது பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டதால், ரோகித்தும், விராட்டும் களத்தில் எப்படி இருக்கிறார்கள்? என்பதையே அனைவரும் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அப்போது தான் கேப்டன் ரோகித் சர்மாவின் கோபம், அதட்டலையும் கூடவே பார்க்க முடிந்தது. 

முதல் ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணாவை கெட்ட வார்த்தையில் திட்டினார். பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த பிரசித் கிருஷ்ணா, பந்தை பிடிக்கத் தவறியதால் கடுப்பான ரோகித் வசவு வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித்தின் கோபத்துக்கு ஆளானவர் சாஹல். பீல்டர்களை மாற்றிக் கொண்டிருந்தபோது, சாஹலை பவுண்டரி லைனுக்கு செல்லுமாறு கூறினார் ரோகித். அப்போது, சாஹல் மெதுவாக அவரது பீல்டிங் பொஷிஷனுக்கு சென்று கொண்டிருந்ததை பார்த்த அவர், ‘ஏன்டா உனக்கு என்ன ஆச்சு, வேகமாக ஓட முடியாதா?’ என ஆவேசமாக கேட்டார். இந்த வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி, இணையத்திலும் வைரலாகியுள்ளது. சாந்தமான கேப்டன், சாமர்த்தியமான கேப்டன் என பேசப்பட்ட ரோகித்தின் மறுப்பக்கத்தை பார்த்து ரசிகர்களும் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கின்றனர்.

மேலும் படிக்க | மும்பை கேப்டனாக விரும்பினாரா ஹர்திக் பாண்டியா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.