சிவகார்த்திகேயனின் அடுத்த 4 படங்களின் அப்டேட்டுகள்!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் தமிழில் வெளியாகவுள்ள ஆக்ஷன்-காமெடி நிறைந்த படம் ‘டான்‘.  இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் உடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கிறார்.  இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், ஷிவாங்கி, ராஜு ஜெயமோகன், ஆர்ஜே விஜய் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், சென்னை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் நடத்தப்பட்டது.  ‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்களுக்கு மவுசு கூடியுள்ளது, அந்த வகையில் ‘டான்’ படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்த படம் மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | வலிமை உட்பட தென் இந்திய படங்களின் வெளியீடு தேதிகளின் முழு விவரம்

அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.  தற்காலிகமாக இப்படத்திற்கு ‘SK 20’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.  இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தில் நவீன் பாலிஷெட்டி மற்றும் பிரேம்ஜி நடிக்கவுள்ளனர், இதில் இரண்டு கதாநாயகிகள் என்று கூறப்படும் நிலையில் ராஷ்மிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அனிதா சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் இன்று தொடங்குகிறது.  இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SK20 Announcement ! || Sivakarthikeyan || Anudeep K V || Thaman || Suresh  Productions - YouTube

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பானது தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-5ன் ஃபைனல்ஸில் வெளியிடப்பட்டது.  ‘SK21‘ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம் இந்தியா இணைந்து தயாரிக்க உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து சில பிராஜெக்டுகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.  இருப்பினும் இப்படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் பற்றிய தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

sivakarthikeyan

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘அயலான்’.  இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.  அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த படமாக இப்படம் உருவாகிறது.  இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவரும் வகையில் ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  சிவகார்த்திகேயன் மற்றும் ஏலியன் இருக்கும் இப்படத்தின் போஸ்டரும், ‘வேற லெவல் சகோ’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | நெல்சனுடன் ரஜினி இணையும் படத்தின் கதை இதுவா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.