சூளகிரி: சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் காய்கறி, கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகளை பரவலாக சாகுபடி செய்துள்ளனர். தற்போது முதல்போகத்தில் விளைந்த நெல், ராகி, கம்பு, துவரை, கொள்ளு என பலதரப்பட்ட பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். சூளகிரியை சுற்றி பல கிராமங்களில் நெல் அடிக்கும் களம் இல்லாததால் சாலைகளை களமாக உபயோகிக்கின்றனர். இதனால், சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஓட்டுநர்கள் அவதியடைகின்றனர். பேரிகை, எ.செட்டிபள்ளி ஊராட்சி அலசப்பள்ளி, மாரண்டப்பள்ளி ஊராட்சி வேம்பள்ளி, சென்னபள்ளி ஊராட்சி மேடுபள்ளி, சாமனப்பள்ளி ஊராட்சி கீரணப்பள்ளி, பீஜேப்பள்ளி ஊராட்சி, பாத்தகோட்டா உள்ளிட்ட பகுதிகளில் நெல் அடிக்கும் களங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
