சைக்கிளை திருடிய இளைஞர், தேடிச்சென்ற சிறுவன், வீடு வந்த போலீஸ்: நடந்தது என்ன?

தன் கண்ணெதிரே தனது சைக்கிள் திருடப்பட்டது குறித்து சிறுவன் கொடுத்த புகாரின் பேரில், சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு, அதை சென்னை கீழ்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் நேரடியாக சிறுவனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கம் ஹைரோடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுவனின் சைக்கிளை ஒரு இளைஞர் திருடி ஒட்டிச் சென்றுள்ளார். அதனை கண்ட அந்த சிறுவன் தனது சைக்கிளை திருடி, அதை ஓட்டிச்சென்ற மர்ம நபரை விரட்டிச் சென்றுள்ளான். 

எனினும் அந்த திருடன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வேகமாக சென்றுவிட்டான். தனது கண்ணெதிரே சைக்கிள் திருடப்பட்டதை சிறுவனால் தாங்க முடியோயவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து சென்னை கீழ்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக சைக்கில் கண்டுபிடிக்கப்பட்டு சிறுவனிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ள்ளார். 

திருடப்பட்ட அந்த சைக்கிள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் அந்த சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று அதை ஒப்படைத்துள்ளார். அதற்கு அந்த சிறுவன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | தமிழக பாஜக அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

மேலும் படிக்க | மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.