நெல்வேலி செல்பி வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு! என்ன நடந்தது அன்று?

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் திரையரங்கில் மாஸ் பண்ணியது.  2021ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் சாதனை செய்து முதலிடம் பிடித்தது.  மாஸ்டர் படம் வெளிவருவதற்கு முன்பே விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி இணையம் முழுக்க ட்ரெண்ட் ஆகி சாதனை படைத்தது.  

மேலும் படிக்க | விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன!

மாஸ்டர் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பிற்காக விஜய் மற்றும் படக்குழுவினர் நெய்வேலியில் உள்ள சுரங்கத்தில் இருந்தனர்.  அந்த சமயத்தில் விஜய்யின் இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  அதுமட்டுமல்லாது, விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.  இது அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.  வருமானவரி சோதனையின் முடிவில் விஜய்யின் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

அதன்பின்பு விஜய்க்கு ஆதரவாக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு மக்கள் குவிந்தனர்.  விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் இருந்த அனைவரும் குவிந்தனர்.  இதனால் நெய்வேலி சுரங்கம் திருவிழா கூட்டமாய் மாறியது.  பின்பு, விஜய் அங்கு இருந்த ஒரு பஸ்ஸின் மீது ஏறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  அப்போது மாஸாக ஒரு செல்பியும் எடுத்து கொண்டார்.  இந்த சம்பவம் நடந்து இரண்டு தினங்களுக்கு பிறகு விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் அந்த செல்பி வெளியானது.  

 

விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட செல்ஃபியாக புதிய சாதனை படைத்தது.  இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாத அளவிற்கு விஜய் ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் ரீட்விட் செய்தனர்.  இந்த செல்பி வெளிவந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

மேலும் படிக்க | ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட்? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.