பாஜக-வில் இணைந்த WWE கிரேட் காளி..!

சட்டமன்ற தேர்தலையொட்டி பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், ஆம்ஆத்மி, பா.ஜ.க என மும்முனை போட்டியால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முதலமைச்சராக இருக்கும் சைனி, அடுத்த முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று துவக்கம்

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி அரியணை ஏறக்கூடாது என நினைக்கும் பா.ஜ.க, அம்மாநிலத்தில் பிரபலமாக இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, பிரபல மல்யுத்த வீரர், முன்னாள் WWE சாம்பியன் கிரேட் காளி பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

பஞ்சாப் காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த த கிரேட் காளி என அழைக்கப்படும் தலிப் சிங் ராணா, 2000 ஆம் ஆண்டில் தொழில்முறை மல்யுத்த வீரராக மாறினார். 4 ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள அவர், பஞ்சாப் தேர்தலையொட்டி பா.ஜ.கவில் இணைந்துள்ளார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

மேலும் படிக்க | பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் எதை அணிவது என்பது பெண்களின் உரிமை: பிரியங்கா காந்தி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.