2022 புத்தாண்டு கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து படக்குழு இன்று படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக SK20-யின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் அடுத்த 4 படங்களின் அப்டேட்டுகள்!
தற்போதைக்கு ‘SK 20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’ படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் KV இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக இப்படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் தெலுங்கு படமும் இதுவே. சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக S.S.தமன் இசையமைக்கிறார். ‘SK 20’ படத்தின் மீது இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கைடாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படம் அடுத்த மாதம் 25ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும், ராஜ் கமல் மற்றும் சோனி இணைத்து வழங்கும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திலும் சிவா நடிக்க உள்ளார். SK20-யின் படப்பிடிப்பு முடிந்த பின்பு இந்த படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள அயலான் படமும் இந்த வருடம் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | ஹாரிஸ் இசையில் முதன்முறையாக சிவகார்த்திகேயன்?