மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு
புத்தகமில்லா தினம்
என்ற செயல்பாட்டினை நடத்த அனுமதித்து, அதற்காக மாணவர் ஒருவருக்கு ரூ.10 வீதம் 1,26,3550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.1,26,35,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதும் நோக்கத்துடனும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும், மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வதற்கும், உடல், மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கு கலாட்டா: திமுக கூடாரத்தில் வேலுமணி; ஸ்வீட் பாக்ஸ் நம்பிக்கையில் செந்தில் பாலாஜி!

இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ‘புத்தகமில்லா தினம்’ கொண்டாட வழிகாட்டுதல் மற்றும் நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.