முதல்வர் கொடுத்த க்ரீன் சிக்னல்…சாட்டையை சுழற்றும் டிஜிபி!

ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ… அரசியல் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் அவரவர் லெவலுக்கு லோக்கல் வெயிட் காட்டுவதை வழக்கமாக உள்ளது. இந்த பழக்கம் கூட்டணி கட்சிகளுக்கு கொஞ்ச கொஞ்சமாக வந்துவிட்டது போல தெரிகிறது.

நாங்க யாரு தெரியுமில்ல.. இப்போ யாரோ ஆட்சி நடக்குதுன்னு தெரியுமில்ல… என்று அரசியல் கட்சி பிரமுகர்கள் விடும் உதார் சவுண்ட், பொதுமக்கள் மத்தியில் கட்சிகளின் தலைமைக்கும், கட்சிகளும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகிறது.

இப்படிக்கு கட்சி தலைமைக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் லோக்கல் அரசியல் புள்ளிகளின் கொட்டத்தை அடக்க வேண்டிய பொறுப்பு காவல் துறையினருக்கு உண்டு. ஆனால், ஆளுங்கட்சி, கூட்டணி கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் என்றாலே, நமக்கேன் வம்பு என்று காக்கி சட்டைகள் எண்ணி, அவர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ளும்படியாகதான் யதார்த்த நிலை உள்ளது.

போலீசாரின் இந்த நிலையை மாற்றி, அவர்களுக்கு பூஸ்ட் தரும்படியான நம்பிக்கை வார்த்தைகளை காவல் துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளி்த்துள்ளாராம்.

மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு நிலவரம் குறித்து அவர், காவல் துறை உயரதிகாரிகளுடன் சில தினங்களுக்கு ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘திமுக கூட்டணியிலுள்ள சில கட்சிகள் போலீசாருடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும், இதுதொடர்பாக இதனை சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களிடம் சொல்லி கண்டிக்க வேண்டும்’ என்று காவல் துறையினர் தரப்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

அதற்கு, ‘நான் சொல்வது இருக்கட்டும்… யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்க’ என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டதாம். முதல்வர் கொடுத்த இந்த க்ரீன் சிக்னலை அடுத்துதான், தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள, அரசியல் சார்பு ரவுடிகள் அனைவரையும் பாரபட்சமின்றி உடனே கைது செய்ய டிஎஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.