ரஜினிகாந்த் – நெல்சன் படத்தின் அறிவிப்பு இன்று வெளியீடு?

சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் அதன் தொடர்ச்சியாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.  டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தினைப் பற்றிய அறிவிப்பு வெளியானது.  பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  இந்நிலையில் நீண்ட நாட்களாகவே ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கப் போகிறார் என்ற தகவல் வந்துகொண்டிருந்தது.  இன்று அதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் இருந்தது.  இவர்தான் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இன்று தமிழ் சினிமாவில் உள்ள பாதி இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.  இருப்பினும் அதில் முன்னணியில் இருந்தார் நெல்சன்.  காரணம் ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க போகிறது என்று முன்னாள் இருந்தே ஒரு தகவல் இருந்தது.  தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. எனவே ரஜினி – நெல்சன் படம் கிட்டத்தட்ட இறுதியானது என்ற தகவலும் வெளிவந்தது. 

 

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும் என்று ட்வீட் செய்துள்ளது ஆனால் அதில் எந்த ஒரு பெயரும் இடம் பெறவில்லை. இதனை கண்ட ரசிகர்கள் இது ரஜினி – நெல்சன் கூட்டணிக்கான அறிவிப்பு தான் என்று கூறி வருகின்றனர்.  இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு அது எந்த படத்திற்கான அறிவிப்பும் என்பது தெரியும். சில தினங்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்திலிருந்து முதல் சிங்கிள்காண அறிவிப்பு வெளியானது. பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பாடலான அரபிக்குத்து வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | நெல்வேலி செல்பி வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு! என்ன நடந்தது அன்று?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.