ஸ்டாலின் சொன்னதால் பெட்ரோல் குண்டு வீச்சு – அண்ணாமலை பகீர்!

சென்னை தியாகராய நகரில் உள்ள
பாஜக
தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று அதிகாலையில் மர்ம நபர்கள்
பெட்ரோல் குண்டு
வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக, சென்னை நந்தனத்தை சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலக செயலாளர் சந்திரன் மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியதாக கருக்கா வினோத் கூறியதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கருக்கா வினோத் காசுக்காக பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், பணம் கொடுத்து யாரேனும் குண்டு வீசச் சொல்லியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சால் உற்சாகமடைந்து கமலாலயத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள் என்று பாஜக தலைவர்
அண்ணாமலை
குற்றம் சாட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி; கேள்விகளால் மடக்கிய பெண்!

மேலும், பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு கோரப்படும். தேச விரோத சக்திகள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.