ரீசார்ஜ் கட்டணங்கள் விலை உயரும் அபாயம்! ஆபரேட்டர்களுக்கு வரிவிதிப்பால் குறையும் லாபம்!

இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை விரைவில் தொடங்க முனைப்புக் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குத்துறை ஆணையம் 5ஜி சேவை வழங்கும் டெலிகாம் ஆபரேட்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஏர்டெல் தலைமை நிர்வாக அலுவலர் கோபால் விட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

5ஜி மொபைல் ரூ.15,000க்கும் கீழ்… இதுல உங்களுக்கு புடிச்சது எது?

விலை உயரும் ரீசார்ஜ் திட்டங்கள்

அதில், “தொலைத்தொடர்பு துறையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இந்த ஆண்டு செல்போன் கட்டணம் மேலும் உயரும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஒரு சந்தாதாரருக்கு தற்போது ரூ.163 என்று இருக்கும் கட்டணம் ரூ.200 வரை உயர வாய்ப்பு உள்ளது.

தற்போது நாட்டில் 3 முதல் 4 விழுக்காடு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே 5ஜி தொழில்நுட்பம் ஆதரவைக் கொண்டுள்ளது. இது 2022 மார்ச் மாதத்திற்குள் 10 முதல் 12 விழுக்காடு வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023-2024ஆம் ஆண்டுகளில் பெரும்பாலானோர் 5ஜி சேவையை பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள்.

ஜியோ vs ஏர்டெல்: 56 நாட்கள் செல்லுபடியாகும் அதிரடி திட்டங்கள்

வரியால் லாபம் இழப்பு

அரசின் அதிக வரிவிதிப்பு காரணமாக 2021-2022ஆம் நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் ஏர்டெல் நிகர லாபத்தில் 2.8 விழுக்காடு சரிந்துள்ளது. தேவையான பொருள்களின் விலை உயர்வு காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக பயனர் சேவையில் பாதிப்பு ஏற்படக் கூடும்.

இதனை சரிசெய்யும் விதமாக ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படும். மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவினங்களை குறைப்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசிடமும் வரி சலுகைகள் குறித்து பேசி வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

Airtel Google partnership: ஏர்டெல்-க்கு அடித்த ஜாக்பாட் – கோடிக்கணக்கில் டாலரைக் குவித்த கூகுள்!

தொடர்ந்து உயர்த்தப்படும் ரீசார்ஜ் திட்டங்களின் விலை

Airtel, vodafone idea ஆகிய நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களில் விலையை 2021 நவம்பர் மாதம் உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான Reliance Jio, ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 20% விழுக்காடு வரை உயர்த்தியது. இதனால் கைப்பேசி பயனர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் விலை உயரும் என்று வெளியான அறிவிப்பால், பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Poco M4 Pro 5G: Dimensity 810 சிப்செட் உடன் வரும் போக்கோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் திட்டங்களை மாற்றி அமைத்து வருகிறது. எனவே, பயனர்கள் ரீசார்ஜ் செய்யும் முன், தெளிவாக கட்டண விவரங்களை தெரிந்துகொள்ளுபடி கேட்டுக் கொள்கிறோம். அந்தந்த நெட்வொர்க் வழங்கும் செயலியை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால், கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.