5 வருஷமா முதலை வடித்த "கண்ணீர்".. 3 வாரம் போராடி உதவி செய்த இளைஞர்.. மனிதம் இன்னமும் இருக்கு!

5 வருஷமா முதலை வடித்த “கண்ணீர்”.. 3 வாரம் போராடி உதவி செய்த இளைஞர்.. மனிதம் இன்னமும் இருக்கு!

பாலி: வீட்டு விலங்குகளாக இருந்தாலும் காட்டு விலங்குகளாக இருந்தாலும் அது ஆபத்தில் சிக்கியிருக்கும் போது நல்ல மனம் படைத்தவர்கள் யாரும் பேசாமல் இருக்க மாட்டார்கள். தங்களால் இயன்ற உதவியை செய்வார்கள். மிகவும் ஆபத்தான காட்டு விலங்குகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

மனிதர்களுக்கு அடிப்பட்டாலும் வேடிக்கை பார்க்கும் நிலை தற்போது மெல்ல மாறி வருகிறது. இதற்கு உதாரணம் தற்போது விலங்குகளுக்கு ஆபத்து என்றால் ஓடி சென்று காப்பாற்றும் உள்ளங்கள் உள்ளன.

எங்கேயாவது அடிப்பட்டு கிடக்கும் நாய், குரங்கு, காகம், கொக்கு, புறா, பசு, எருது உள்ளிட்ட ஜீவன்களை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தொடரும் மனித - விலங்கு மோதல்: சிறுத்தைகளை கண்டால் என்ன செய்ய வேண்டும்?தமிழ்நாட்டில் தொடரும் மனித – விலங்கு மோதல்: சிறுத்தைகளை கண்டால் என்ன செய்ய வேண்டும்?

பேச்சு மூச்சில்லாத குரங்கு

பேச்சு மூச்சில்லாத குரங்கு

அண்மையில் தமிழகத்தில் ஒரு செய்தியை படித்திருப்போம். சாலையில் பேச்சு மூச்சில்லாமல் ஒரு குரங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த ஓட்டுநர் ஒருவர் அந்த குரங்கிற்கு உதவி செய்ய முன் வந்தார். குரங்கின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி பார்த்தார். ஆனாலும் அந்த குரங்கிற்கு உயிர் மூச்சு வரவில்லை.

மருத்துவமனை

மருத்துவமனை

இதையடுத்து சற்றும் யோசிக்காமல் அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து ஊதியதில் அந்த குரங்கு அசைந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அந்த குரங்கின் உயிரை காப்பாற்றினார். அது போல் இந்தோனேஷியாவில் ஒரு சம்பவம் நடந்துள்லது. இங்கு ஒரு காட்டு முதலையின் கழுத்தில் டயர் சிக்கிக் கொண்டது.

வனவிலங்கு பாதுகாவலர்கள்

வனவிலங்கு பாதுகாவலர்கள்

இந்த டயர் 2016ஆம் ஆண்டு முதல் சிக்கியுள்ளது. அங்கு பணியாற்றும் வனவிலங்கு பாதுகாவலர்கள் அந்த டயரை எடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தார்கள். மத்திய சுலவேசியில் உள்ள பலு ஆற்றில் தினந்தோறும் வெயிலுக்கு இதமாக இருக்க ஆற்றில் மேற்பகுதிக்கு 17 அடி கொண்ட முதலை வரும்.

பறவைகள்

பறவைகள்

அதே போல் ஒரு நாள் வந்தது. அப்போது பறவைகளை விற்பனை செய்யும் 34 வயது இளைஞர்கள் ஒருவர், அந்த முதலைக்கு உதவி செய்ய முற்பட்டார். இதற்காக ஒரு கோழியை அதற்கு இரையாக போட்டார். அப்போது அந்த கோழியை உண்ண வந்த போது அந்த முதலைக்கு வலை வீசி கயிற்றால் கட்டினார்.

தண்ணீருக்குள் சென்ற முதலை

தண்ணீருக்குள் சென்ற முதலை

பின்னர் 3 வாரங்களாக அங்குள்ள உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த முதலையை கரை பகுதிக்கு இழுத்து வந்தார். பின்னர் அதன் கழுத்தில் கட்டியிருந்த டயரை துண்டித்தார். ஏற்கெனவே அந்த முதலைக்கு உதவ இருமுறை கயிற்றை வீசிய போது அதன் எடை காரணமாக சிக்கவில்லையாம். பின்னர் ஒரு வழியாக சிக்கியது. அதன் கழுத்தில் இருந்த டயர் நீக்கப்பட்டு மீண்டும் தண்ணீரில் விடப்பட்டது.

ஏன் சிக்கியது

ஏன் சிக்கியது

அதற்கு டயரை நீக்கிய போது மிகவும் பாதுகாப்பாக கட்டி வைத்திருந்தனர். முதலையை வீட்டில் வளர்க்க யாரேனும் டயரை அதன் வாயில் மாட்டி அதை பிடிக்க முயற்சித்திருப்பர். ஆனால் அந்த டயர் அதன் கழுத்தில் சிக்கியதால் தங்களை கடித்துவிடும் என்ற அச்சத்தால் அப்படியே விட்டுவிட்டிருக்கலாம் என தெரிகிறது.

English summary
Crocodile gets free from struck tyre neck after 5 years in Indonesia.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.