Poco M4 Pro 5G: Dimensity 810 சிப்செட் உடன் வரும் போக்கோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. இதன் விற்பனை வரும் நாள்களில் தொடங்க உள்ளது. குறைந்த விலையில் அதிரடி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் டெக் சந்தைக்குள் நுழைகிறது. ஒரே கவலை என்னவென்றால், ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களின் 5ஜி நெட்வொர்க் ஆதரவு கொடுக்கப்படவில்லை.

இந்த சூழலில், சியோமியின் கீழ் இயங்கும் போக்கோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட், மூன்று லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களுடன் இந்த
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் (poco m4 pro 5g Specifications)

இந்த ஸ்மார்ட்போன் 6.6″ அங்குல முழு அளவு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த டிஸ்ப்ளே, 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240Hz ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதள அடிப்படையிலான MIUI 12.5 ஸ்கின் உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி செயல்திறனை பொருத்தவரை, 6nm நானோமீட்டரில் கட்டமைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாலி கிராபிக்ஸ் எஞ்சின் இந்த சிப்செட்டுக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. UFS2.2 மெமரி ஆதரவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி, 6ஜிபி ஆகிய இரு ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

Redmi Note 11: ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50 MP கேமரா, AMOLED திரை… வரிசைகட்டும் சியோமி போன்கள்!

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கேமரா (poco m4 pro 5g camera)

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளது. அதில் முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல் கேமராவும், கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸும், 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகள், செல்பி மற்றும் முகத்தை கொண்டு போனை திறக்க 16 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஊக்குவிக்கும் 33W பாஸ்ட் சார்ஜர் போனின் கூடவே வழங்கப்படுகிறது. வைஃபை, ப்ளூடூத், இன்பிராரெட் சென்சார், டைப்-சி, 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஸ்மார்ட்போன் தன் வசம் கொண்டுள்ளது.

Redmi Note 11S: 108 MP கேமரா, AMOLED திரை, Stereo ஸ்பீக்கர்ஸ்… விருந்து படைத்த சியோமி!

போக்கோ ப்ரோ எம்4 5ஜி விலை (poco m4 pro 5g price)

பவர் பிளாக், கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம். இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,999ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999ஆக நிர்ணயிக்கப்படலாம்.

Vivo T1 5G: குறைந்த விலையில் வெறித்தனமான அம்சங்கள்… சியோமியுடன் நேரடியாக மல்லுக்கட்டும் விவோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.