அதானி மற்றும் ஜீ இடையே பண பரிமாற்றம் பற்றிய வதந்திகளில் உண்மை இல்லை!

கௌதம் அதானி மற்றும் டாக்டர் சுபாஷ் சந்திரா இடையே பண கைமாற்றம் ஒப்பந்தம் பற்றிய வதந்திகளை ஜீ மீடியா குழுமம் மறுத்துள்ளது. ஜீ குழுமம் தனது நிலைப்பாட்டை முழுமையான வகையில் தெளிவுபடுத்தியுள்ளது, மேலும் வதந்திகளுக்குப் பின்னால் உள்ளவற்றையும் மேற்கோள் காட்டி உள்ளது.  பொதுமக்கள் மற்றும் சிறு பங்குதாரர்களின் நலன் கருதி, Zee Media Group அத்தகைய ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியது.

விற்பனை பற்றிய வதந்திகள், விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தைகள் என அனைத்தும் முற்றிலும் தவறானவை என்று ஜீ குழுமம் தெரிவித்துள்ளது. Zee Media Group இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (SEBI) இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புபவர்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்பும் இது போல் ஒரு வதந்தி வந்த நிலையில் அப்போதே ஜீ குழுமம் இதனை மறுத்தது.  ஜீ குழுவின் சார்பில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக சந்தைக் கட்டுப்பாட்டாளரான இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் விசாரணையைக் கோரியுள்ளோம். ஜீ மீடியா இதற்கு முன்பே இந்த வதந்திகளை மறுத்துள்ளது. இருப்பினும், இன்னும் சிலர் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகிறார்கள். சமீபத்தில் விளம்பரதாரர்கள் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை அதிகரித்துள்ளனர். ஷேர் வார்ட் மூலம் விளம்பரதாரர்கள் தங்கள் பங்கை அதிகரித்துள்ளனர்” என்று கூறினார்.

மேலும் படிக்க | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.