அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தும் பாஜக…ஐகோர்ட்டில் அரசு பகிரங்க குற்றச்சாட்டு!

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக
தமிழக பாஜக
இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து… ஆனால் ஒரு கண்டிஷன்!

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜகவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் தமது மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களும், டிவிட்டர் பதிவுகளும் நீதிபதி முன்பு சமர்பிக்கப்பட்டன.

முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

அப்போது தமிழக அரசு சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, பாஜகவின் இளைஞரணி தலைவரானமனுதாரரை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் 68 ஆயிரம் பேர் உள்ள நிலையில் பொது அமைதியை குலைக்கும் வகையில் அவர் ட்வீட் செய்துள்ளதாகவும், அரசியலுக்காக மதத்தை ஒரு கருவியாக மனுதாரர் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். பத்திரிகையில் வந்த செய்தியையே பகிர்ந்ததாக வினோஜ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராயவும், வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கு விசாரணை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.