இந்திய அணி அபார வெற்றி – வெஸ்ட் இண்டீஸ் வொயிட்வாஷ்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க | பஞ்சாப் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் திடீர் ராஜினாமா! பின்னணி?

266 ரன்களை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடந்த 2 ஒருநாள் போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீபக் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஓடன் ஸ்மித் 36 ரன்கள் எடுத்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிக மோசமான நிலையில் இருந்தது. குறிப்பாக அல்ஜாரி ஜோசப் விராட் கோலியையும், ரோஹித் சர்மாவையும் ஒரே ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பினார். விராட்கோலி டக் அவுட்டில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுகள் சரிந்த பிறகு, ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்ரேயாஸ் 80 ரன்கள் எடுத்தார். பந்த் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் நல்ல ஸ்கோரை எட்டிய இந்திய அணி, பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது. . 

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தை தவறவிடும் ப்ரீத்தி ஜிந்தா! அவரே சொன்ன தகவல்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.