க்ரீன் சிக்னல் கொடுத்த டெல்லி – மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி செக்!

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் செக் வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 142 நாட்கள் கடந்த நிலையில், அண்மையில்,
தமிழக அரசு
அனுப்பிய நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆளுநர்
ஆர்.என்.ரவி
நிராகரித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இதை அடுத்து, கடந்த 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வு விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக – அதிமுக – காங்கிரஸ் – விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, திமுக அரசு அனுப்பி உள்ள நிலையில், இந்த முறை ஆளுநர் கால தாமதம் செய்யமாட்டார்; குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு – முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு?

இந்நிலையில், நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுகவின் எதிர்பார்ப்பு இப்போதைக்கு நிறைவேறப் போவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் செக் வைக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால் அதே மசோதாவை பேரவையில் நிறைவேற்றி இரண்டாவது முறையாக அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது. இதில் ஆளுநர் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் எதுவும் சட்டத்தில் சொல்லப்படாததால் அதை வைத்தே மசோதாவை கிடப்பில் போட்டு விடுகிறார்கள் ஆளுநர்கள். இந்த விவகாரத்தில், மத்திய அரசு அறிவுறுத்தினால் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக அனுப்பி வைப்பார் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து அவர் மூலம் மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆளுநர் க்ரீன் சிக்னல் கொடுத்தாலும், குடியரசுத் தலைவர் மூலம் ரெட் சிக்னல் போடப்பட வாய்ப்பு உள்ளது. அதனால், ஆளுநரிடம் இருக்கும் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கச் சொல்லி விட்டு, அவர் மூலமாக அந்த மசோதாவை கிடப்பில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சர்ச்சைகளில் இருந்து ஆளுநர் விடுபட முடியும் எனக் கூறப்படுகிறது.

சம்பளத்துடன் விடுப்பு – தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

எனினும் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் டெல்லியில் சில முயற்சிகளை திமுக தரப்பு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. நீட் விலக்கு விவகாரம் திமுகவின் இமேஜ் சம்பந்தப்பட்டதால் குறிப்பாக முதல்வர் ஸ்டாலினின் இமேஜ் சம்பந்தப்பட்டதால், டெல்லியில் திமுக சில முயற்சிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.