திமுக ஆட்சிக்கு சிக்கல்?; சீக்ரெட் உடைக்கும் ஓபிஎஸ்!

கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் புகழூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தில்லு முல்லு செஞ்சு திமுக ஜெயிக்க நினைக்கிறது – எடப்பாடி காட்டம்

அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓபிஎஸ்
கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பதவி விலகும் தமிழக ஆளுநர்?; கிண்டி ராஜ்பவனில் பரபரப்பு!

இதில் ராஜ்ய சபா உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கொரனோ தொற்று கால கட்டத்தில் முழுவதுமாக கட்டுப்படுத்தும் முதல் மாநிலமாக நம் மாநிலம் இருந்தது. கடந்த 2021 ஆண்டில் திமுக பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதனால் ஆட்சிக்கு வந்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

நீட் தேர்வு ஒழிப்பு தான் முதல் கையெழுத்து என்றார்கள். நடைபெற்றதா? நேற்று வந்த உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக பேசிய இறுதி வரை சட்டப்போராட்டம் நடத்துவது தான் ரகசியம் என்று பேசினாராம்.

பிரதமர் ஆர்டர், ஒரு வாரத்தில் புது பிரச்சனை; பரபரப்பை எகிற விட்ட பாஜக அண்ணாமலை!

பொங்கல் பரிசு தொகுப்பை பார்த்து நாடே சிரிக்குது. ஒரு பைசா கொடுக்க வக்கில்லை. அரிசி பிரித்தாலே நாற்றம் அடிக்குது. வெல்லம் தண்ணியா உருகி போச்சு. வட நாட்டில் இருந்து பொருட்களை வாங்கி கொடுத்தார்கள்.

அரிசியை மாட்டுக்கு கொடுத்தால் முறைத்து பார்க்கிறது. பொங்கல் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது. அம்மாவிற்கும், எம்ஜிஆருக்கும் துரோகம் செய்த அனைவரும், அதன் பலனை அனுபவிப்பார்கள்.

கடந்த 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி தந்தது அதிமுக ஆட்சி தான். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு இருக்கிறது.

ரஜினியால் மனநலம் பாதித்த ரசிகர்?; தலைவர் வருவார்…போலீசிடம் உறுதி!

இந்த தேர்தல் தொண்டர்கள் நிற்கும் தேர்தல். தொண்டர்கள் தான் வார்டு உறுப்பினர்களாக இருக்கும் தேர்தல். அவர்கள் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும். அவர்களை மகத்தான வெற்றியை பெற வைக்க வேண்டும்.

எனக்குப் பின்னாலும் பல நூறு ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்றார் அம்மா. மீண்டும் அதிமுக தான் ஆட்சி கட்டிலில் அமரும். உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி அடைய வேண்டும்.

ஆணுக்கு பெண் சமம், குடும்பத் தலைவிக்கு தான் அனைத்து பொறுப்புகள் உண்டு. அதனால் 50% இட ஒதுக்கீடு வழங்கச் சொன்னார் அம்மா. நம்மை நம்பி இருக்கின்ற வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

எடப்பாடி பகிரங்க எச்சரிக்கை; காவல் துறை அதிகாரிகள் ஷாக்!

தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுடன் திமுக மல்லுக்கட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் அரசியல் வட்டாரத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என ஓபிஎஸ் கூறியிருப்பதை வைத்து பார்க்கும்போது திமுக ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் திரைமறைவு வேலைகள் நடக்கிறதோ? என்று தமிழக அரசியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.