திருப்பூர்: திருப்பூரில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிவிட்டு தப்பிய கொலையாளி ஓசூர் அருகே கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி. பகுதியில் வசித்த நேஹா என்ற இளம்பெண்ணே கொலையானவர். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், ஒரு மாதத்திற்கு முன்பு தான் அந்த பகுதியில் குடியேறினார். அவரை கொலை செய்த மர்மநபர்கள் சூட்கேஸில் சடலத்தை அடைத்து புதுநகர் பகுதியில் உள்ள கால்வாயில் வீசி சென்றனர். இந்த வழக்கில் சாலையோர சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனம் ஒன்றில் சூட்கேஸை எடுத்து சென்றது தெரியவந்தது. அவர்கள் கொலையான நேஹாவுடன் தங்கியிருந்த ஜெய்லால், அபிஜித் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அவர்களின் செல்போனை கண்காணித்தனர். அதன் அடிப்படையில் ஓசூர் மற்றும் கர்நாடகாவிற்கு இரண்டு தனிப்படையினர் விரைந்தனர். அப்போது ஓசூர் உத்தனப்பள்ளி அருகே பதுங்கியிருந்த கொலையாளி ஜெய்லால் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளி அபிஜித்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
