பல வகையான ₹10 நாணயங்கள்; குழப்பத்தை போக்கிய அரசு!

சில கடைக்காரர்கள் நாம் 10 ரூபாய் நாணயத்தை கொடுக்கும் போது, இந்த காயின் செல்லாது என பல சமயங்களில் வாதிடுவதைப் பார்க்கலாம். பல நேரங்களில், 10 ரூபாய் நாணயம் குறித்து குழப்பமான சூழ்நிலை உருவாகிறது. இந்த நாணயம் போலியானது என சில கடைக்காரர்கள் வாதிடுகின்றனர். 

புழகத்தில் உள்ள ₹ 10 நாணயங்கள் 

சந்தையில் பல வகையான 10 ரூபாய் நாணயங்கள் இருப்பதே இத்தகைய குழப்பத்திற்குக் காரணம். சமீபத்தில் இது தொடர்பான நிலவரத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தியது. 10 ரூபாய் நாணயங்கள் முற்றிலும் செல்லுபடியாகும் என்றும், அது போலியானது அல்ல என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Jackpot! இந்த ‘2’ ரூபாய் நோட்டு இருந்தா லட்சக்கணக்கில் பணம் அள்ளலாம்..!!

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் 10 ரூபாய் நாணயங்களை  பயன்படுத்தலாம் என்று அரசு தெரிவித்தது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பிப்ரவரி 8ஆம் தேதி மாநிலங்கள் அவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளார்.

பல்வேறு அளவுகள், கருப்பொருள்கள் மற்றும் வடிவமைப்புகளில் அச்சிடப்பட்டு, ரிசர்வ் வங்கியால் விநியோகிக்கப்படும் ரூ.10 நாணயங்கள் சட்டப்பூர்வமானவை என்று அவர் கூறினார். அனைத்து வகையான பரிவர்த்தனைகளிலும் இதனைப் பயன்படுத்தப்படலாம். என மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்.

ரிசர்வ் வங்கியும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது

மேலும், சிலர் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை என அவ்வப்போது புகார்கள் வருவதாக சவுத்ரி தெரிவித்தார். பொதுமக்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தவறான எண்ணங்கள் மற்றும் அச்சங்களை அகற்றவும், ரிசர்வ் வங்கி அவ்வப்போது பத்திரிகை செய்திகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 10 ரூபாய் கொண்ட 14 டிசைன் நாணயங்களும் செல்லுபடியாகும் என்றும், அவை  சட்டப்பூர்வமானவை என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே கூறியுள்ளது.

மேலும் படிக்க | இந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருந்தா, உங்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.