பாஜக தனித்து நிற்பதால் என்ன பயன்? – எச்.ராஜா சொன்ன ரகசியம்!

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதற்காக திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அடையாறு மண்டலம் 179 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் சிவசங்கரை ஆதரித்து பாஜக மூத்த தலைவர்
ஹெச்.ராஜா
விஜயநகரில் உள்ள சாரதி நகர்,விஜிபி செல்வா நகர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

தேர்தல் திருவிழா: பூ மாலை சுற்றி வாக்கு சேகரிப்பு!

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த
எச்.ராஜா
பேசியதாவது:-

“தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவுக்கு மாபெரும் எழுச்சி உள்ளது. அதனால் தான் தாமரை தனித்து களம் காண்கிறது. தி.நகர் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடயங்களை அளித்துளனர்.

திமுகவின் தூண்டுதலின் பேரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக ஒரு சந்தேகம் உள்ளது. 2007-ல் அப்போதைய அமைச்சர் ஆற்காடு வீராசாமி பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட அலுவலகங்களை தாக்க அறிக்கை மூலமாக தூண்டி விட்டார். அறிக்கை விட்டு அழிக்கக்கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது.பல இடங்களில் தேர்தல் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் வேலையாக இருக்குமோ என்று சந்தேகம் உள்ளது.

நேற்று, உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தை வரவேற்கிறேன். பிரசாரத்தின் போதே தங்க நகை கடன் உதவித்தொகை எங்கே என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் தில்லுமுல்லுகள் காரணமாகவே ஜெயித்துவிடலாம் என திமுக நினைத்துவிட்டது. திருமாவளவன் உலருவதற்கே பிறந்தவர் எல்லாருமே சட்டைக்குள் தான் பூணூலை போட்டுள்ளனர்.

வாயைக் கொடுத்து சிக்கிக்கொண்ட குஷ்பு… ஹிஜாப் விவகாரம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

சரக்கு மிடுக்கு பேச்சிற்கு புகழ்பெற்றவர் திருமாவளவன். பாராளுமன்றத்தில் அல்லாஹு அக்பர் என்று பேசியுள்ளார் திருமாவளவன். 2024 தேர்தலை மனதில் வைத்து மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஹிஜாப் விவகாரம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு நிதித்துஐ அமைச்சருக்கு தமிழில் பேச தெரியவில்லை ’தடுமாறுகிறான்’ என ஒருமையில் பேசினார்” ஒரு அமைச்சரை மரியாதை குறைவாக ஒருமையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.