சூப்பர் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்துள்ளது. கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை இயக்கிய அவர், அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை எடுத்தார். இரண்டு படங்களும் ஹிட்டாக அமைந்ததால். 3வது படம் இளையதளபதி விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் படிக்க | வலிமை இயக்குநர் வினோத்துக்கு போனிக்கபூர் அனுப்பிய மெசேஜ்
நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் ’பீஸ்ட்’ திரைப்படம் கோடை விருந்தாக திரைக்கு வர உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நெல்சன் திலீப்குமாருக்கு அடுத்த ஜாக்பாட் அடித்துள்ளது. அண்ணாத்த திரைப்படத்தை முடித்த பிறகு ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் அடுத்த யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர் தான் என பல இயக்குநர்கள் பெயர்கள் அடிப்பட்ட போதும், நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார், ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – விஜய் – சிவகார்த்திகேயன் ஆகியோரை ஒரே மேடையில் இருக்குமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை செய்துள்ளார். விஜய் டிவியில் இருக்கும்போது விருது வழங்கும் விழாவில், அவர்கள் 3 பேரும் ஒன்றாக இருக்குமாறு கான்செப்டை உருவாக்கியவரே இயக்குநர் நெல்சன் திலீப்குமாராம். இப்போது, அந்த ஸ்டேஜில் இருந்த இருவரை ஏற்கனவே இயக்கிய நெல்சன், விரைவில் ரஜினிகாந்தையும் இயக்க உள்ளார் என்பது தான் இதில் ஹைலைட்.
மேலும் படிக்க | நெஞ்சுக்கு நீதி டீசர் ரிலீஸ் – உண்மைச் சம்பவத்தின் பின்னணி?