ரியல் ஹீரோவா மாறனும்னா…! ஆண்ட்ரியாவின் வேண்டுகோள்!

திரையுலகில் பாடகியாக நுழைந்த ஆண்ட்ரியா ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அவதாரமெடுத்தார்.  அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.  ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை, தரமணி, அவள், வட சென்னை, அரண்மனை-3 போன்ற படங்களில்  இவரது நடிப்பு திறமையை பல பாராட்டுக்களை பெற்றது.  சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 

மேலும் படிக்க | கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம்?

தற்போது இவர் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.  இவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ரத்த தானம் அளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  மேலும் அந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு சில வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.  அதில் “இன்று ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டுமா? அப்போ இரத்த தானம் செய்யுங்கள்! இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததால், நேற்று @apollo_chennai ல் உள்ள #இரத்த வங்கிக்குச் சென்றேன். 

 

அங்கு அவர்கள் முதலில் இரத்த தானம் செய்ய நம் உடல் தகுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்கின்றனர்.  அதற்காக இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவுகள் போன்றவற்றைச் சரிபார்த்து இரத்த தானம் செய்ய அனுமதிக்கின்றனர்.  மேலும் தனது ஆண் ரசிகர்களுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக “அழகான ஆண்களே! நீங்கள் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வேண்டுமா? தயவு செய்து இரத்த தானம் செய்து ஒருவரின் உயிரைக் காப்பாற்றுங்கள்.  மேலும் “நான் மருத்துவர்களுக்காக ஒரு பாடலைப் பாடுவது போல, இரத்த தானம் செய்பவர்களுக்கு ஒரு பாடலைப் பாடி உள்ளேன், இரத்த தானம் செய்பவர்கள் என்னை டேக் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2‘ என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் இப்படம் வெளியாக இருக்கிறது.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் அடுத்த 4 படங்களின் அப்டேட்டுகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.