விசித்ராவின் விசித்திரங்கள்.. மாமனாருக்கு பயங்கர ஷாக்.. திடீர் திருப்பத்தை தந்த திருப்பத்தூர் கேஸ்

விசித்ராவின் விசித்திரங்கள்.. மாமனாருக்கு பயங்கர ஷாக்.. திடீர் திருப்பத்தை தந்த திருப்பத்தூர் கேஸ்

திருப்பத்தூர்: எல்லாத்துக்கும் காரணம் என் மருமகள்தான், அவள் செல்போனில் எல்லாத்தையும் பார்த்துட்டேன் என்று, மாமனார் போலீசில் சொன்ன வாக்குமூலம்தான் திருப்பத்தூர் கொலையில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்… இவரது மகன் நவீன்குமார்.. 29 வயதாகிறது..

முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார்… திருமணம் நடந்து 8 வருடமாகிறது. மனைவி பெயர் விசித்ரா.. 24 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

கிச்சனில் சமைத்து கொண்டிருந்த பெண்.. உள்ளே சென்ற மாமனார்.. அரிவாளால் ஒரே போடு.. அலறிய திருப்பத்தூர்கிச்சனில் சமைத்து கொண்டிருந்த பெண்.. உள்ளே சென்ற மாமனார்.. அரிவாளால் ஒரே போடு.. அலறிய திருப்பத்தூர்

 மர்மசாவு

மர்மசாவு

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நவீன்குமாரை அவரது நண்பர் சீனிவாசன் அவரை தண்ணி அடிக்க அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.. சீனிவாசனும் அதே பகுதியை சேர்ந்தவர்தான்.. 26 வயதாகிறது. முதலில் மது அருந்த நவீன்குமார் மறுத்துள்ளார்.. சீனிவாசன்தான் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார்.. மது அருந்திய கொஞ்ச நேரத்திலேயே நவீன்குமாருக்கு வாயில் நுரை தள்ளி உள்ளது. பிறகு அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்..

மருமகள்

மருமகள்

உடனே அவரை சீனிவாசனும், அவரது நண்பர் ஜனார்த்தனனும், வீட்டுக்கு கொண்டுச்சென்றுள்ளனர்.. அதை பார்த்து பதறிய குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். ஒருவேளை அதிக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என்று நவீன்குமாரின் அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் நினைத்துள்ளனர்.. அதனால், நவீன்குமாரின் சடலத்தையும் புதைத்துவிட்டனர்…

 மாமனார்

மாமனார்

இந்தநிலையில் விசித்ரா, எந்நேரமும் போனிலேயே இருந்துள்ளார்.. கணவன் இறந்த துக்கம் கொஞ்சமும் இல்லாமல், எந்நேரமும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட விசித்திராவின் நடவடிக்கைகள், மாமனார் முருகன், மற்றும் மாமியாருக்கு பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அப்போதுதான், மருமகளின் செல்போனை அவருக்கு தெரியாமல் மாமனார் எடுத்து பார்த்துள்ளார்.. அதில், சீனிவாசனிடம் பலமுறை விசித்ரா பேசியிருந்தது தெரியவந்தது…

 மருமகள்

மருமகள்

எனவே, நவீன்குமாரின் அப்பா, மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.. அத்துடன் மருமகள் மீதுதான் நிறைய சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பேரில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் முன்னிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள், நவீன்குமாரின் உடலை தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்தனர்…

விசித்ரா

விசித்ரா

இன்னும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை.. அது வந்தால்தான், நவீன்குமார் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா?, அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? என்பது தெரிய வரும். விசித்ராவின் செல்போன் முருகனிடத்தில் சிக்கியதும், அதில், சீனிவாசனுடன் மணிக்கணக்கில் விசித்ரா பேசியிருப்பதும் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Tirupattur Mysterious death of son and Suspicion on daughterinlaw

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.