இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா அபார வெற்றியை பெற்று தொடரையும் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் 3வது போட்டியிலும் வெற்றி பெற்று 3 – 0 என தொடரை கைப்பற்ற திட்டம் தீட்டி வருகிறது.
மேலும் படிக்க | ’கெட்ட வார்த்தை, அதட்டல்’ கேப்டன் ரோகித் சர்மாவின் மறுமுகம்..!
ரோஹித் சர்மா ஒருநாள் அணியின் முழுநேர கேப்டன் ஆனா பின்பு அவர் தலைமையில் நடைபெறும் முதல் தொடரை வென்றுள்ளது. அணியில் ஜடேஜா, பும்ரா, ஷமி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா இந்த தொடரை வென்றுள்ளது. காயத்திற்கு பிறகு விளையாடிய முதல் ஒருநாள் போட்டியிலேயே ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 36*, இரண்டாவது போட்டியில் 64 என நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளார்.
கொரோனாவால் தனிமைப்படுத்தபட்டு இருந்த தவான், ருத்ராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இரண்டாவது போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரிஷப் பந்த் ஓப்பனிங் பிளேயராக களம் இறக்கப்பட்டார். இருப்பினும், 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 3வது போட்டியில் ஓப்பனிங் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், நாளை ஐபிஎல் மெகா ஏலம் தொடங்க உள்ளதால் வீரர்கள் தங்களை நிரூபிக்க கடும் முயற்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | IND vs WI 2nd ODI: இந்திய அணி அபார வெற்றி, தொடரை கைப்பற்றியது இந்தியா