ஹிஜாப் சர்ச்சை.. பள்ளிகள் திறப்பு.. – கர்நாடகத்தில் கொடி அணிவகுப்பு நடத்திய பாதுகாப்புப் படை!
உடுப்பி: ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் உடுப்பியில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் கர்நாடகத்தில் கொடியேந்தி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.
தை மாதத்தில் இடி மின்னலுடன் 4 நாட்களுக்கு கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்
இந்தவிவகாரம் நாடுமுழுதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பல கல்லூரிகளிலும் இந்த நிலை தொடர்ந்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது.

ஹிஜாப்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. இனி ஹிஜாப் அணிந்துவரக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனாலு மாணவிகள் ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதனால் கடந்த டிசம்பர் மாதம், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு ‘ஆப்டென்ட்’ போடப்பட்டது.

அல்லாஹு அக்பர்
மீண்டும் ஹிஜாப் அணிந்து பெண்கள் கல்லூரிக்க வந்தபோது, அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். எங்களை கல்லூரிக்குள் விடுங்கள், எங்கள் படிப்பு வீணாகிறது என கண்ணீர் மல்க நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். கடந்த சில தினங்களுக்கு முன், ஹிஜாப் அணிந்து தனியாக வந்த பெண்னை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்லி இந்து மாணவ அமைப்பினர் எதிர்த்தனர். அப்போது அவர், ‘அல்லாஹூ அக்பர்’ என்று கூறிய வீடியோ வைரலானது.

நீதிமன்றம்
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மனுதாக்கல் செய்யப்பட்டது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு படை
அசம்பாவிதங்கள் தடுக்கும் விதமாக கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மாநிலத்தில் அமைதி நிலைநாட்டப்படும் என தெரிவித்தார். பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதால் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு படை உடுப்பி நகர் முழுவதும்,பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதுபோன்ற கொடி அணிவகுப்பு வழக்கமாக தேர்தல் நேரத்தில் தான் நடத்தப்படும்.