அடுத்து நம்ம ஆட்சி தான் – அடித்து சொல்லும் ராகுல் காந்தி!

கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார்.

கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் கூட பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் பரிதவித்தது. இதை அடுத்து சுயேட்சைகள் மற்றும் இதரக் கட்சிகளின் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், மொத்தம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள கோவா மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், காங்கிரஸ் – பாஜக – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி – மேற்கு வங்க மாநில முதலமைச்சர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், கோவா மாநிலத்தில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், கோவா மாநிலத்தில் சுரங்கத்தை நிலையான மற்றும் சட்டபூர்வமான முறையில் மீட்டெடுக்க திட்டமிட்டு உள்ளோம். இம்முறை அறுதிப் பெரும்பான்மை பெற்று, கோவாவில் ஆட்சி அமைப்போம். ஆட்சி அமைத்ததும் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.