ஒரு நாளோட போயிருக்குமே சிம்ரன்; இப்படி பண்ணிட்டிங்களே! -மகானைக் கலாய்க்கும் சோஷியல் மீடியா

மகான் படம் பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகள் கலந்தே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. படத்தில் இருக்கும் குழப்பங்கள் பற்றி நிறைய கேள்விகள் சீரியஸாகவும், கிண்டலாகவும் பதிவிடப்பட்டு வருகின்றன. நம் கண்ணில் பட்ட அந்த மாதிரியான ஜாலியான, அதே சமயம் நியாயமான கேள்விகளை உங்களுக்காகத் தொகுத்திருக்கிறோம். சில கேள்விகளை பலரும் கேட்டிருந்தார்கள்.

சிறுவன் ஒருவன் தவறு செய்கிறான். காந்தியவாதியான அவர் அப்பா அவனை அஹிம்சை வழியில் சொல்லி திருத்தாமல் அடி வெளுத்துவிடுகிறார். துப்பாக்கிக்கே அஹிம்சை போதுமென்ற காந்தி வழியில் வாழ்பவர் சீட்டு ஆடினதற்காக அடிப்பதெல்லாம் எதில் சேர்க்க?

அது மட்டுமா… அந்த அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா? தன் மகன் பிறந்த நாள் சுதந்திர நாளில் வர வேண்டுமென்பதற்காக பிறந்த தேதியையே மாற்றி சொல்லி பிராடுத்தனம் செய்தவர்.

விக்ரம் ஒரு பாருக்குச் செல்கிறார். அங்கே தன் மாணவன் ஒருவனைப் பார்க்கிறார். அந்த மாணவனின் அப்பா விக்ரமின் சிறுவயது நண்பன். அப்போது கூடவா தெரியாது?

ஊழலை ஒழிக்கத் துடிக்கிறார் ஒரு நேர்மையான அரசு அதிகாரி. ஆனால், அவரே மனைவிக்குத் தெரியாமல் சின்ன வீடு வைத்திருக்கிறார். இருவரையும் ஒரே நேரத்தில் சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறார். இது ஊழல் இல்லையா?

ஒருவனை மாட்டு லோடு வண்டில ஏத்தி எங்கோ அனுப்புகிறார்கள். அவனை அவன் வீடு குடும்பம் என யாருமே தேடுவதிலை. அவனும் ஊருக்குத் திரும்பி வரமாட்டான். அந்த லாரி போன ஊரிலே செட்டில் ஆகி, புதிதாக ஒரு ஆல்க்ஹால் சரக்கை கண்டுபிடித்து, கடை போட்டு ‘ஒருநாள் விக்ரம் இந்த ஊருக்கு வருவான்’ எனக் காத்திருக்கிறான்.

image

கேட்க காமெடியாக இருக்கிறதா? ஆனால், விக்ரம் & கோ கரெக்டாக அந்த ஊருக்கே போகிறார்கள். அவனும் இவர்களை மடக்கி சரக்கை ஊற்றிவிடுகிறான்.

ஒருவனைக் கொல்ல போலீஸே திட்டமிடுகிறது. மலைக்கு அழைத்துச் சென்று,அவன் பைக்கை மலையில் மோதவிடுவதுதான் திட்டம். அதற்கேற்றது போல் செட்டப்லாம் செய்துவிடுவார்கள். அங்கு போனபிறகு சீன் நீண்டு விடுகிறது. அதனால் மறந்துபோய் அவனைச் சுட்டுக் கொல்கிறார்கள். கேட்க ஆளே இல்லையா?

மகன் துருவ்க்கு சிறுவயதில் அப்பா மீது கோவம். காரணம், அவர் குடித்துவிட்டார் என்பது. நாட்டில் 99% பேர் குடிக்கிறார்கள் என்பது போலீஸ் வேலைக்குப் போன பிறகாவது புரிய வேண்டாமா?

ஒரு நாள் குடிச்சதுக்கு சிம்ரன் ஓவர் ரியாக்ட் பண்ணலைன்னா காந்தி மகான் பழையபடி மகானாவே இருந்துருப்பாரு. இவ்ளோ கஷ்டமே இருந்துருக்காது அவருக்கும் நமக்கும்கற எண்ணத்தை தவிர்க்கவே முடியல.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.