Nokia 105: சும்மா வெச்சு செய்யலாம்… 25 நாள்களுக்கு சார்ஜ் போட தேவையில்லை!

உலகளவில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நோக்கியா நிறுவனம், சில காலங்கள் முடங்கி கிடந்தாலும், தற்போது புது புது அவதாரங்களை எடுத்து வருகிறது. என்ன தான் ஸ்மார்ட்போன் சந்தையில் தீவிரமாக நுழைந்தாலும், தனக்கான பியூச்சர் போன் ரசிகர்களை நிறுவனம் மறப்பதில்லை. இவர்களுக்காக ஆண்டுக்கு குறிப்பிட்ட சில மாடல் பியூச்சர் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

முதியோர்களுக்கு ஏற்ற போன் இது எனலாம். அவர்களால் அவ்வப்போது எழுந்து சென்று போனை சார்ஜ் செய்ய முடியாது. இந்த பிரச்னைகளை இந்த மொபைல் தீர்த்து வைக்கும். இதுமட்டுமில்லாமல் 2000 தொடர்புகள் வரை இந்த மொபைலில் பயனர்கள் சேமித்து வைக்க முடியும். எனவே, டைரியை தேடி அலையும் சங்கடமான சூழ்நிலையும் ஏற்படாது.

நோக்கியா 105 பேட்டரி (Nokia 105 battery)

அந்த வகையில் 2019ஆம் ஆண்டு வெளியான நோக்கியா 105 மாடலில் புதிய வெர்ஷன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் நாள் முழுக்க அல்லது நாள் கணக்கில் பேசிக் கொண்டிருக்கும் அளவிற்கு பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் 25 நாள்கள் வரை சார்ஜ் பிரச்னை இல்லாமல் நண்பர்கள், உறவினர்களுடன் அளவளாவலாம்.

பல பிராந்திய மொழிகளின் ஆதரவு இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளதால், தாய் மொழி மட்டும் தெரிந்தவர்களுக்கு
நோக்கியா 105 மொபைல்
பயனுள்ளதாக இருக்கும். கறுப்பு, நீலம், பிங் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளின் இந்த போன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் கட்டணங்கள் விலை உயரும் அபாயம்! ஆபரேட்டர்களுக்கு வரிவிதிப்பால் குறையும் லாபம்!

நோக்கியா 105 சிறப்பம்சங்கள்
(Nokia 105 specifications)

நோக்கியா 105 போனில் 1.77″ அங்குல QQVGA டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் S30+ இயங்குதளத்தின் உதவியுடன் இயங்குகிறது. 2ஜி ஆதரவுடன் இரட்டை சிம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்போன்ஸ் பொருத்துவதற்காக 3.5mm ஆடியோ ஜாக் இதில் உள்ளது.

பயனர்களின் விருப்பமான விளையாட்டான பாம்பு விளையாட்டு இந்த போனுடன் பிரி லோடட் ஆக வருகிறது. போல்டான நோக்கியா 105 மொபைல் கையில் எடுத்து மாற்றக்கூடிய பேட்டரியுடன் வருகிறது. இந்த போன் இந்திய சந்தையில் ரூ.1,349க்கு விற்கப்படுகிறது. இதே மொபைலில் ஒற்றை சிம் வெர்சன் வெறும் ரூ.1,249க்கு ஷாப்பிங் தளங்கள், சில்லறை வர்த்தகக் கடைகளில் விற்கப்படுகிறது.

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?

HMD Global நிறுவனம், விரைவில் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் எனக் கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.