இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

டிஜிட்டல் உலகத்தில் பணப்பரிவர்த்தனை முதல் பல்வேறு சேவைகளுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறோம். அனைத்து தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இடமாக இருக்கும் அந்த இணையம், பாதுகாப்பானதா? என்றால் இல்லை. ஒவ்வொரு கணக்குகளுக்கும் பெயர் மற்றும் கடவுச் சொல் வைத்திருந்தாலும், ஹேக்கர்கள் உங்களின் தகவல்களை எளிதாக திருடிக்கொள்வார்கள். 

மேலும் படிக்க | YouTube-ல் பணம் சம்பாதிக்க புதிய வழிகள்!

அதற்கு காரணம், நாம் கொடுக்கும் பாஸ்வேர்டு அந்தளவுக்கு பாதுகாப்பானதாக இருப்பதில்லை. நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எளிமையாக உருவாக்கும் பாஸ்வேர்டுகளை எளிதாக டிராக் செய்யும் ஹேக்கர்கள், அதன்மூலம் வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த மோசடி நடைபெறும்போது உங்களுக்கு எந்த தகவலும், சமிக்கையும் கிடைக்காது. 

எப்படி என கேட்கிறீர்களா?. ஹேக்கர்கள் சில கோடுகளை வைத்துள்ளார்கள். அவர்கள் வைத்திருக்கும் கோடுகளுக்குள் உங்களின் பாஸ்வேர்டு வந்ததால், அவர்களுக்கு அது ஜாக்பாட் தான். புரியவில்லையா? உதாரணமாக 1 என்ற எண்ணை ஹேக்கர்கள் ஒரு கோடாக பயன்படுத்துகிறார்கள் என்றால், அந்த எண் உங்களின் பாஸ்வேர்டில் இருக்கும் போது, அந்த அக்கவுண்ட் எளிதாக ஹேக்கர்களின் இலக்காக மாறுகிறது. 

பாஸ்வேர்டு குறித்து ஆய்ந்து வரும் Nordpass நிறுவனம் எப்படி சிறப்பான பாஸ்வேர்டு அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது. அந்த நிறுவனத்தின் ஆய்வின்படி, சில குறியீடு எண்களைக் கொண்ட பாஸ்வேர்டுகளை பட்டியலிடுகிறது. அந்த எண்கள் உங்களின் பாஸ்வேர்டில் இருந்தால், ஹேக்கர்கள் சில நொடிகளில் உங்களின் கணக்குகளை ஹேக் செய்துவிடுவார்கள் என்கிறது அந்த நிறுவனம். அதன்படி, 

123456, 123456789, 12345, 12345678, 111111, 123123, 1234567890, 1234567 இவையெல்லாம் வீக் பாஸ்வேர்டுகள் என Nordpass நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்று உங்களின் பாஸ்வேர்டாக இருந்தால் உடனடியாக மாற்றுமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தடங்கலுக்கு வருந்துகிறோம்: தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மன்னிப்புக் கோரும் Twitter

கடினமான பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி?

8 எழுத்துகளுக்கு மேல் பாஸ்வேர்டு இருக்க வேண்டும் 

எண்கள், எழுத்துகள், # போன்ற குறியீடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு பாஸ்வேர்டை வெவ்வேறு தளங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.