தனியார் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் பலரும் ஆர்வமாக இருந்தனர். முதல் சீசன் பெற்ற வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு சமீபத்தில் 5-வது சீசன் நிறைவடைந்தது.
அதன்படி மக்களை மீண்டும் உற்சாகப்படுத்த டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும், அதனை கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும், 24 மணி நேரமும் இதனை கண்டு மகிழலாம் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக முதல் 5 சீசன்களில் பங்கேற்ற சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | பூஜையுடன் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் SK20 படப்பிடிப்பு!
இந்த போட்டியில் பங்கேற்றுள்ள அனைவரும் மிகவும் அதிரடியாக போட்டியாளர்கள் தான், ஒருத்தருக்கு ஒருவர் சண்டைகள் போடுவதில் பெரிய நபர்கள் ஆவார்கள். அதன்படி இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறினார்.
இந்த நிலையில் தற்போது இந்த வாரம் பிக்பாஸ் அலடிமேட் வீட்டில் இருந்து சுஜா வெளியேறுவார் என கூறப்படுகிறது. காரணம் இதுவரை அவருக்கு தான் குறைவான வாக்குகள் வந்துள்ளதாம். ஆனால் யார் உறுதியாக வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க | வனிதா Vs ஜூலி: களைகட்டப்போகும் பிக்பாஸ் அல்டிமேட்..!